கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் கட்சியினர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு
- ஆளுயர மாலை அணிவித்தும் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி,
தி.மு.க.,வின், 15வது உட்கட்சி தேர்தல் முடிந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக, மாநில தி.மு.க. விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் தேர்வானார். சென்னையில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பர்கூர் அடுத்த ஒப்பதவாடியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்கவும், ஆளுயர மாலை அணிவித்தும் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பெங்களூரு சாலை வழியாக திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர செயலாளர் எஸ்.கே.நவாப் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், சாமிநாதன், நாகராஜன், கோதண்டன், அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், சித்ரா சந்திரசேகர், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளருமான குமரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர அவைத் தலைவர் தணிகை குமரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், ஊத்தங்கரை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கலீல் (மகனூர்பட்டி), மணிகண்டன் (கீழ்மத்தூர்), ஜெயமணிதிருப்பதி (கீழ்குப்பம்), பூபாலன் (மூன்றம்பட்டி), கல்லாவி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.