வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர்கள் தலைமை செயலாளரிடம் மனு கொடுத்த காட்சி.
பட்டாசு கடைகளுக்கான உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும்- தலைமை செயலாளரிடம், கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர்கள் மனு
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகளுக்கான உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரிடம், மாவட்ட வணிகர்கள் மனு அளித்தனர்.
- கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 9பேர் பலியானர். இதன்காரணமாக மாவட்டத்தில் உரிமம் பெறாத பட்டாசு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
கிருஷ்ணகிரி:
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பட்டாசு விற்பனை தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்றும், ரத்து செய்யப்பட்ட பட்டாசு கடை உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மெட்ரோ ஏ.டி.கண்ணன், செயலாளர் ஜெ.எம்.எஸ். சின்னப்பன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் கிருஷ்ணகிரி பட்டாசு வணிகர் சங்கம், ஓசூர் பட்டாசு வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.