உள்ளூர் செய்திகள்

கொங்கு கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா

Published On 2022-12-21 15:25 IST   |   Update On 2022-12-21 15:25:00 IST
  • கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
  • தமிழ்த்துறை பேராசிரியர் அசோகன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

மொரப்பூர்,

மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு. தலைமை வகித்து குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன்,பொருளாளர் சாமிக்கண்ணு,கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன்,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் சந்திரசேகர்.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் குணசேகரன வரவேற்று பேசினார்.

கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் நாகராஜ், தமிழரசு, குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்த்துறை பேராசிரியர் அசோகன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இவ்விழாவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிரிப்பும், சிந்தனையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கல்லூரி இயக்குநர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News