உள்ளூர் செய்திகள்

பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு தூய்மையாகிறது- அரசு ரூ.641 கோடி நிதி ஒதுக்கியது

Published On 2023-01-21 09:01 GMT   |   Update On 2023-01-21 09:01 GMT
  • ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
  • இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை:

கொடுங்கையூர் குப்பைக்கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டநிதி, மாநில அரசுநிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ-மைனிங் முறையில் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News