உள்ளூர் செய்திகள்

வடக்குதாமரைகுளம் ஆற்றுப்பாலத்தில் சூழ்ந்த செடி, கொடிகளை அகற்றும் பணி தொடங்கியது.

Published On 2023-10-04 08:27 GMT   |   Update On 2023-10-04 08:27 GMT
  • ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
  • விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

தென்தாமரைகுளம்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. வடக்கு தாமரைகுளத்தில் இருந்து கக்கரம்பொத்தை செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் செடி, கொடிகள் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது . அதேபோல் வெள்ளம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் செடி கொடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அகஸ்தீஸ்வரம் யூனியன் பொது நிதியில் இருந்து ராட்சத பொக்லைன் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் செடி கொடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு ஆகியோர் பணியை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News