உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கேரளாவில் இருந்து வாங்கி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை

Published On 2022-10-07 11:44 GMT   |   Update On 2022-10-07 11:44 GMT
  • 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • மோட்டார் சைக்கிள் பறிமுதல்

கன்னியாகுமரி:

குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் சந்தேகப் படும்படியாக வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர்.

பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த விஜி (வயது 22), சஜி (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வர்களிடம் மேலும் விசா ரணை நடத்திய போது கஞ்சா பொட்டலங்களை கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடியவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜா, தக்கலையைச் சேர்ந்த ஜெனிஸ், திக்கணம் கோட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News