உள்ளூர் செய்திகள்

மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

கூடங்குளம் ஹார்வர்டு பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

Published On 2023-04-05 09:03 GMT   |   Update On 2023-04-05 09:03 GMT
  • கூடங்குளம் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக சாரண, சாரணியர் படை மாவட்ட செயலர் பால்துரை கலந்துகொண்டு கிண்டர் கார்டன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

வள்ளியூர்:

கூடங்குளம் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சாரண, சாரணியர் படை மாவட்ட செயலர் பால்துரை கலந்துகொண்டு கிண்டர் கார்டன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசி னார். நிகழ்ச்சியில் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் செல்வராணி, ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் மழலையர் பிரிவு தலைவர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News