உள்ளூர் செய்திகள்

வாய்க்கால்கள் தூர் வாரும் பணி நடைபெற்ற காட்சி. 

காட்டுமன்னார்கோவில் பகுதியில்வாய்க்கால்கள் தூர்வாரும் பணிபொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-11-06 14:40 IST   |   Update On 2023-11-06 14:40:00 IST
தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமமான 'மோவூர் முட்டம். கால்நாட்டா ம்புலியூர் ,ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில் கீழணை உதவி செயற் பொறியாளர் ெகாளஞ்சிநாதன் முன்னிலையில் குமராட்சி உதவி பொறியாளர் அருளரசன் ஆகியோரின் நேரடி பார்வையில்இந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தற்பொழுது தூர்வாரப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News