உள்ளூர் செய்திகள்

வாய்க்காலுக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2023-10-06 11:32 IST   |   Update On 2023-10-06 11:32:00 IST
  • புகளூர் அருகேவாய்க்காலுக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு
  • இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

 வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம்( வயது 41). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா (26) .இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் பிரகாசம் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணி அளவில் முத்தனூர் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி புகளூர் வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பிரகாசம் புகளூர் வாய்க்காலுக்குள் விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த வாய்க்காலுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது முனி நாதபுரம் முனியப்ப சாமி கோவில் அருகே கட்டிடத்தில் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் ஒரு மணியளவில் பிரகாசத்தின் உடலை மீட்டு வேலாயுதம் பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News