உள்ளூர் செய்திகள்

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவன் வெற்றி பெற்று சாதனை

Published On 2023-09-30 11:52 IST   |   Update On 2023-09-30 11:52:00 IST
  • மாநில அளவிலான பேச்சு போட்டியில்குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவன் வெற்றி பெற்று சாதனை
  • போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம், 

ஐ.சி.டி அகாடமி ஆண்டுதோறும் ஐ.சி.டி யூத் டாக் என்னும் மேடைப்பேச்சு போட்டியினை நடத்திவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மேடைப்பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். திருச்சி வட்டாரத்தில் நடைபெற்ற மேடை பேச்சு போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் பயிலும் மாணவன் திவேஷ் ஐயப்பன் கலந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான 5 பொன்மொழிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இதில் அவர் 3-ம் பரிசு கிடைத்தது.

இந்த போட்டியின் நடுவர்களாக முன்னணி ஐ.டி. துறைகளில் பணிபுரியும் மனித வளம் மேலாளர்கள் கலந்து கொண்டனர். மேடைப் பேச்சு போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்த கல்லூரியின் மாணவனை கல்லூரியின் முதல்வர் முருகன், துறை தலைவர் ராஜகுரு மற்றும் கல்லூரியின் மனித வளத்துறையயைச் சேர்ந்த மஹேந்திரன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டினர். 

Tags:    

Similar News