உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-09-20 12:04 IST   |   Update On 2023-09-20 12:04:00 IST
  • கரூரில் கல்குவாரி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
  • க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திபாளையத்தை சேர்ந்த தனியார் கல்குவாரியில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அழகம் பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் மணிவேல் (வயது 30) பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் தங்கி இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த, க.பரமத்தி போலீசார் பிரேதத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிவேல் மனைவி முருகேஸ்வரி, அளித்த புகார்படி நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில், இருந்து வந்த மணிவேல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News