உள்ளூர் செய்திகள்
பண்டரிநாதன் பஜனை மடத்தில் உறியடி திருவிழா
- பண்டரிநாதன் பஜனை மடத்தில் உறியடி திருவிழா நடந்தது
- திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.
கரூர்:
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கரூர் ஸ்ரீபண்டரிநாதன் பஜனை மடத்தில் இன்று 10-0ம் ஆண்டு உறியடி திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மேல் உறியடித்து எம்பெருமான் வாணவேடிக்கையோடு திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வரும் 150 குழந்தைகளுக்கு இனிப்பு, சிறப்பு பிரசாத பாக்கெட் வழங்கப்படும் என திருக்குறள் பேரவைச் செயலாளரும், விழாக்குழு சிறப்புத் தலைவருமான மேலை பழநியப்பன், கோயில் அறங்காவலர் குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.