உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் சுபசக்தி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா

Published On 2023-01-11 13:02 IST   |   Update On 2023-01-11 13:02:00 IST
  • சத்தியமங்கலம் சுபசக்தி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா நடைபெற்றது
  • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கபட்டது

குளித்தலை:

குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் உள்ள சுபசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் லதா சக்திவேல் வரவேற்புரையாற்றினார், சுபசக்தி . கல்லூரி தலைவர் இன்ஜினியர் சக்திவேல் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இயக்குனர் ரத்தினம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பி.எஸ்.என்.எல். முதன்மை பொறியாளர் ஓய்வு இரத்தினசாமி கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.

Tags:    

Similar News