உள்ளூர் செய்திகள்
டிரைவரிடம் ரூ.1.36 லட்சம் வழிபறி
- இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சம்பவம்
- ரூ.1.36 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்
கரூர்,
திருச்சி மாவட்டம், முசிறி, திருதலையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 37). பொக்லைன் இயந்திர டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு, திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் இருந்து, கரூர், திருக்காம்புலியூர் வழியாக இருசக்கர வாகனத்தில் முசிறிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர், ராமசாமியை வழிமறித்து, அவரிடமிருந்த ஒரு லட்சத்து, 36 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, ராமசாமி கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து வ சாரணை நடத்தி வருகின்றனர்.