உள்ளூர் செய்திகள்

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2023-03-04 14:06 IST   |   Update On 2023-03-04 14:06:00 IST
  • 250 கன அடி 100 அடியாக குறைக்கப்பட்டது
  • நீர்மட்டம் 54.04அடியாக உள்ளது

கரூர்,

உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட 250 கன அடி தண்ணீர் வினாடிக்கு 100 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 54.04 அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 684 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 689 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுதும் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையின் நீர்மட்டம் 14.72 அடியாக உள்ளது.

Tags:    

Similar News