உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக குளித்தலை ரயில்வே கேட் அடைப்பு

Published On 2022-08-30 07:45 GMT   |   Update On 2022-08-30 07:45 GMT
  • பராமரிப்பு பணிகளுக்காக குளித்தலை ரயில்வே கேட் அடைக்கப்பட்டது
  • வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவிப்பு

கரூர்:

பராமரிப்பு பணிக்காக இன்று குளித்தலை ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதற்காக வாகனங்கள் செல்ல மாற்று வழித்தடம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் குளித்தலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று (ஆக. 30) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்பதால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழியே செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து குளித்தலையிலிருந்து மணப்பாறை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், பள்ளி பேருந்துகள் தண்ணீர்பள்ளி, பரளி, கோட்டமேடு வழியாக சென்று வரவேண்டும். மணப்பாறையிலிருந்து குளித்தலை வரும் கனரக வாகனங்கள் அய்யர்மலையிலிருந்து சிவாயம், வளையப்பட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, குமாரமங்கலம் வழியாக குளித்தலை சென்றடையலாம். இலகுரக வாகனங்கள் கோட்டைமேடு, எழுநூற்றிமங்கலம், கண்டியூர், வதியம் வழியாக குளித்லை செல்லலாம். அதி கனரக வாகனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்படி வழித்தடங்களில் செல்ல அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News