உள்ளூர் செய்திகள்
உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை
- நானப்பரப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது
- அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் துணை மின்நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையில் நானப்பரப்பு பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பி ஜம்பர் கட் ஆகி அறுந்து கீழே விழுந்து விட்டது. இதனை கண்ட பொதுமக்கள், புகளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பி அறுந்து விழுந்த நேரத்தில், அந்த இடத்தை யாரும் கடந்து செல்லாதததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.