உள்ளூர் செய்திகள்

காகித ஆலை ஊழியர் விபத்தில் சிக்கி படுகாயம்

Published On 2023-08-10 12:37 IST   |   Update On 2023-08-10 12:37:00 IST
  • வேலாயுதம்பாளையம் சொட்டையூரில் காகித ஆலை ஊழியர் விபத்தில் சிக்கி படுகாயம்
  • சிமெண்ட் கலவை லாரி மோதியதால் விபத்து

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே புகளூர் திருவள்ளூர் நகர் 2-வது தெருவைபகுதியை சேர்ந்தவர் நாகராஜ்( வயது 53). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். நாகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சொட்டையூர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நாகராஜ் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நாகராஜனின் மனைவி பழனியம்மாள் (44) கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், லாரி டிரைவரான நாமக்கல், குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சரவணகுமார் மீது வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News