உள்ளூர் செய்திகள்
- மாயனூர் போலீஸ் சரத்திற்குட்பட்ட பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
- சித்தலவாய் மேலக்கார தெருவை சேர்ந்த மருதநாயகம் (வயது 73) என்பவர் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்று கொண்டிருந்தார்.
கரூர்
கரூர் மாயனூர் போலீஸ் சரத்திற்குட்பட்ட பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
அதன்பேரில் மாயனூர் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சித்தலவாய் மேலக்கார தெருவை சேர்ந்த மருதநாயகம் (வயது 73) என்பவர் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை சப்-இன்ஸ்பெக்டர் மகாமுனி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.