உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

Published On 2022-10-29 14:59 IST   |   Update On 2022-10-29 14:59:00 IST
  • காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்
  • திருமணம் செய்து கொண்டனர்

கரூர்

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் துர்கா தேவி (வயது 21). இவர், எதிர் வீட்டில் வசித்து வரும் அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தங்கள் பெற்றோர்களால் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன், மனு வழங்கினர். இதனை தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால். வயதை காரணம் காட்டி, காதல் ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

புதுமண தம்பதிகளாக மாலையும், கழுத்துமாக வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News