உள்ளூர் செய்திகள்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை

Published On 2022-06-29 09:45 GMT   |   Update On 2022-06-29 09:45 GMT
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 2ம் தேதி திருமாநிலையூரில் நடைபெறும் விழாவில் 76,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
  • மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது.


கரூர்:

கரூர் மாவட்ட திமுக சார்பில், உள்ளாட்சி அமைப்பு பிரதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் குளித்தலை எம்எல்ஏ ரா.மாணிக்கம் தலைமையில் கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது-

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 2ம் தேதி திருமாநிலையூரில் நடைபெறும் விழாவில் 76,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கரூரில் வேளாண் கல்லூரி, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது.

ஜூலை 1ம் தேதி மாலை 5.40 மணிக்கு குளித்தலை புறவழிச்சாலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய 4 இடங்களில் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 2ம் தேதி காலை சுற்றுலா மாளிகையில் இருந்து விழா மேடைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

6 மாதத்திற்கு ஒருமுறை உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

எம்எல்ஏ கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணைமேயர் ப.சரவணன், மண்டலத்தலைவர் எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News