உள்ளூர் செய்திகள்

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊக்க தொகை வழங்க கோரிக்கை

Published On 2023-08-10 12:31 IST   |   Update On 2023-08-10 12:31:00 IST
  • குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது
  • ஒன்றிய குழு தலைவர் விஜயவிநாயகம் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுரேஷ் தீர்மானங்களை வாசித்தார். இதில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் இறுதியில் ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் பேசுகையில், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் அரசு திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று பயனடையும் வகையில் பணியாற்றி வரும், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கூட்டத்தில் ஒருமனதாக, அந்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், சாந்தா ஷீலா விஜயகுமார், சந்திரமோகன், சங்கீதா முருகேசன், சத்தியா, கௌரி, ராஜேஸ்வரி, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News