உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Published On 2022-11-21 06:27 GMT   |   Update On 2022-11-21 06:33 GMT
  • மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
  • எம்.எல்‌.ஏ. மொஞ்சனூர் இளங்கோ வழங்கினார்

கரூர்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி , மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதல்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

இதேபோல் உலாமாக்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளப்பட்டி சேர்ந்த உலமாக்கள் 20 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கினார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவியர் என மொத்தம் 8,447 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிகழ்ச்சிகளில் பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், பள்ளபட்டி நகர கழகச் செயலாளரும் நகராட்சி துணை தலைவர் தோட்டம்பஷீர், பள்ளபட்டி பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலவாரிய அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News