உள்ளூர் செய்திகள்

குழாய் வால்வு பழுதானதால் வீணாகும் குடிநீர்

Published On 2023-07-27 13:30 IST   |   Update On 2023-07-27 13:30:00 IST
  • தவுட்டுபாளையத்தில் குழாய் வால்வு பழுதானதால் வீணாகும் குடிநீர்
  • விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

வேலாயுதம்பாளையம்,

புகளூர், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வட்டைக் கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு, அதிலிருந்து குடிநீர் தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. அங்கிருந்து குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை தார் சாலை ஓரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பொருத்தப்பட்டுள்ளது. அந்த வாழ்வு பழுதடைந்து தற்பொழுது அந்த வாழ்வு வழியாக ஏராளமான குடிநீர் வெளியேறி நீரோடை போல் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற முறையில் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் வால்வு பழுதை நீக்கி குடிநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News