உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-28 09:19 GMT
  • காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி நடைபெற்றது

கரூர்:

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி தலைமையில், ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன், கரூர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன்பாபு, கரூர் நகரத்தலைவர் பெரியசாமி, முன்னாள் நகரத்தலைவர் சுப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். குளித்தலை, அரவக்குறிச்சி, தரகம்பட்டி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News