உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

Published On 2023-08-14 13:41 IST   |   Update On 2023-08-14 13:41:00 IST
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு கூட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது
  • சாலைகளை சீரமைக்க கோரிக்கை

வேலாயுதம்பாளையம்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு கூட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேகர் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நகர செயலாளர் லட்சுமி காந்தன், நகர குழு உறுப்பினர்வேலுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.கிளை செயலாளர் இராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-அரிக்காரம் பாளையம் அனாதீனம் என்னும் வகை நிலத்தை நத்தம் புறம்போக்கு வகை நிலமாக வகைமாற்றி இலவச பட்டா வழங்க வேண்டும். இந்திரா காலனி மற்றும் 1-வது வார்டு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர குழு உறுப்பினர்கள் வளர்மதி, சுப்பிரமணி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைசெயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.

Similar News