உள்ளூர் செய்திகள்

அம்மனுக்கு வளையல் அலங்காரம்

Published On 2022-08-02 11:55 IST   |   Update On 2022-08-02 11:55:00 IST
  • அம்மனுக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது
  • ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது

கரூர்:

கிருஷ்ணராயபுரம் மஞ்ச மேடு பகுதியில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. கோவிலுக்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வளையல்கள் அணிந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் வளைகாப்பு முன்னிட்டு ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது. முன்னதாக எல்லையம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அர்ச்சனைகள் ஆராதனைகள் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News