உள்ளூர் செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட கூட்டம்

Published On 2023-08-08 13:14 IST   |   Update On 2023-08-08 13:14:00 IST
  • கரூரில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது
  • நூறுநாள் வேலை வாய்ப்பு கூலியை உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கரூர்,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க, கரூர் மாவட்ட குழு கூட்டம், மாவட்ட தலைவர் பாலன், தலைமையில் தான்தோன்றிமலை அலுவலகத்தில் நடந்தது.அதில், வரும், 15ல் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று, 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக, கோரிக்கைகள் வைப்பது, 100 நாள் வேலை திட்டத்துக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள தினசரி ஊதியம், 294 ரூபாயை வழங்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் முன், கோரிக்கைகளை முன் வைத்து, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜேந்திரன், இ.கம்யூ., கட்சி மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News