உள்ளூர் செய்திகள்
விஷ பூச்சி கடித்து பெண் பரிதாப பலி
- குளித்தலை அருகே விஷ பூச்சி கடித்து பெண் பரிதாபமாக பலியானார்
- மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார்
கரூர்,
குளித்தலை அடுத்த, நல்ல கவுண்டனுாரை சேர்ந்தவர் சிவா, கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 22). இவர் வெளியில் சென்ற போது, விஷ பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்ட்டதை தொடர்ந்து, அவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிந்தாமணிப்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.