உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு
- நடந்து சென்ற பெண்ணிடம் கைவரிசை
- 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கரூர்,
வெள்ளியணை அருகே, இளம்பெண் ணிடம் செயின் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், ராமானூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் யமுனா (வயது 28) இவர் கடந்த, 27ல் மதியம், வெள்ளியணை அருகே, காக்கா வாடி பஸ் ஸ்டாப்பில், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, டூவீலரில் சென்ற அடை யாளம் தெரியாத இருவர், யமுனா அணிந்தி ருந்த ஒன்றேகால் பவுன், செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, வெள்ளியணை போலீசில் யமுனா அளித்த புகாரின் பேரில், இந்த சம் பவத்தில் ஈடுபட்ட, திருச்சி, பாலையூரை சேர்ந்த அர்ஜூனன் (வயது 27), கம்பரசம்பேட் டையை சேர்ந்த சுதாகர், (28)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.