உள்ளூர் செய்திகள்

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் திறன் வளர் பயிலரங்கம்

Published On 2023-10-05 08:23 GMT   |   Update On 2023-10-05 08:23 GMT
  • சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார்.
  • ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் ஆளுமைத்திறன்களை வளர்த்திடும் பொருட்டு ஐக்யூஎசி சார்பாக ஆளுமைத்திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார். இயல்பிலேயே இருக்கும் தங்கள் திறமைகளை மாணவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது, கண்டு கொண்ட திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, தங்கள் திறன்களை வளர்த்து கொள்ளும் முறைகள், பயிற்சி, தேடல் குறித்தும், மாறி வரும் சமூகத்தில் வேலை வாய்ப்பிற்கு அத்திறன்கள் எவ்வாறு பயன்படும் என்பது குறித்தும், பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News