உள்ளூர் செய்திகள்

கல்லங்குழியில் இலவச மருத்துவ முகாம்.

கல்லங்குழியில் இலவச மருத்துவ முகாம்

Published On 2023-03-05 09:27 GMT   |   Update On 2023-03-05 09:27 GMT
வேர்கிளம்பி பேரூராட்சியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கன்னியாகுமரி:

வேர்கிளம்பி பேரூராட்சியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமை கல்லங்குழி பகுதியில் நடத்தியது.

முகாமில் இதயநோய், சர்க்கரை நோய், கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரைராஜ் மனுவேல், முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐஜிபி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜரெத்தினம், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வின்ஸ்எல்ஜின், மாவட்ட செயலாளர் வர்க்கீஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சென்றில்லதா சுஜிர், லாசர், மேரி அனிதா, சஜின், ஒமணா, ஜாஸ்மின் ஜெயந்தி, கட்சி நிர்வாகிகள் புரோசன், கிங்ஸிலி, நெல்சன், விஜயன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News