உள்ளூர் செய்திகள்

ஏழை, எளிய மக்களின் நலன்கருதி பத்திரப்பதிவில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும்

Published On 2023-10-07 08:52 GMT   |   Update On 2023-10-07 08:52 GMT
  • நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
  • குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

நாகர்கோவில்:

நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்க குமரி மாவட்ட தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பதிவு செய்யும் வகையில் சில தளர்வுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் சொந்த வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருமணம், படிப்பு, தொழில், மருத்துவ தேவைகள் ஆகியவைகளுக்கு கூட நிலங்களை விற்க முடி யாத நிலை உள்ளது. 2016-க்கு பிறகு வாங்கிய நிலங்களை பிரிப்பதற்கோ, விற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 22-ஏ என்கிற பெயரில் ஏழை, எளிய மக்கள் வாங்கிய இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் மறு பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனை தளர்வு படுத்தி ஏழை, எளிய மக்களின் நலனை கருதி பத்திரப்பதிவை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News