உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை நீடிப்பு

Published On 2023-09-14 12:29 IST   |   Update On 2023-09-14 12:29:00 IST
  • குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
  • பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காலையில் ஓரளவு மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெப்பத் தின் தாக்கம் நீடித்தே வரு கிறது.

இருப்பினும் மலையோர பகுதிகள் மற்றும் மாவட்டத் தின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தே வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது.குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குளச்சல் 16.8, திற்பரப்பு 8.3, குழித்துறை 8, இரணியல் 7.4, களியல் 7.2, முள்ளங்கினாவிளை 4.6, பெருஞ்சாணி 3.2, பால மோர் 3.2, பேச்சிப்பாறை 3, கன்னிமார் 2.8, முக்கடல் அணை 2.6, புத்தன் அணை 2.6, நாகர்கோவில் 2.2, தக்கலை 2, பூதப்பாண்டி 1.2.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியிலேயே உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.

Tags:    

Similar News