உள்ளூர் செய்திகள்

திருப்பதிசாரம் வேளாண் விதைப்பண்ணையில் 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை தரிசாக போட்டது ஏன்?

Published On 2023-09-17 12:13 IST   |   Update On 2023-09-17 12:13:00 IST
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கேள்வி
  • விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவிக்க முன்வருமா?

நாகர்கோவில் :

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-திருப்பதிசாரம் வேளாண் விவசாய பண்ணையின் கீழ் 40 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. இதில் நடப்பாண்டில் 25 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்ய நெல் பயிரிடப்பட்டது. மீதமுள்ள 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

40 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்கு சந்தியாகுளம் மற்றும் அப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள பெரிய உறை கிணற்றில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், சம்மந்தப் பட்ட துறை அலுவலர்களின் அலட்சியத்தால் 15 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் விதைகள் வாங்க வருகின்ற விவசா யிகளுக்கு விதைகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது.இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கும்பப்பூ சாகுபடிக்காக 92 மெட்ரிக் டன் விதைகள் விவசாயி களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பான பல்வேறு விளக்கங்களை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் திருப்பதிசாரம் வேளாண் விவசாய பண்ணையின் கீழ் விதைகள் உற்பத்தி செய்வதற்கு 15 ஏக்கர் நிலத்தை வேளாண் அலுவலர்கள் ஏன் தரிசாக போட்டுள்ளார்கள் என்ப தற்கான பதிலினை அவர் தெரிவிக்கவில்லை.

பாசனம் செய்வதற்கான சந்தியாகுளம் மற்றும் பெரிய உறை கிணற்றில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் அந்த 15 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டு நெல் விதை ஏன் உற்பத்தி செய்யவில்லை. இதற்கான விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவிக்க முன்வருமா? அரசின் மூலமாக மாதந்தோறும் சம்மந்தப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை தரிசாக போடக்கூடாது என்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி வரு கிறார்கள். ஆலோசனைகள் வழங்குகின்ற வேளாண்மைத் துறை அலுவலர்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தை தரிசாக போட்டது ஏன்? இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை உரிய பதிலளிக்க விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு உரிய பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News