உள்ளூர் செய்திகள்

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்

Published On 2022-06-18 09:09 GMT   |   Update On 2022-06-18 09:09 GMT
  • ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
  • முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இல்ல இயக்குனர் அருள் ஜோதி தலைமையில், மேலாளர் கோபி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு இனிப்பு, கதர் ஆடை வழங்கி பேசினார். முதியோர் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, குற்றாலம், சென்னை மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவனம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வந்து முதியோர்கள் பயன் பெறலாம் என ரோஜாவனம் இயக்குனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா டேனியல், மருத்துவர் ஸ்டீவ் வாழ்த்துரை வழங்கினர். ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

முன்னதாக செவிலியர் கல்லூரி ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்று பேசினார். நிறைவாக முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.மேலாளர் சாமுவேல் ராஜன், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மற்றும் மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News