உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே கோவிலில் நாகர் சிலையை சேதப்படுத்திய வாலிபர்

Published On 2023-07-04 13:54 IST   |   Update On 2023-07-04 13:54:00 IST
  • தினமும் பூஜைக்கு மட்டும்தான் கதவு திறக்கப்பட்டு பூஜை செய்வது வழக்கம்.
  • நிர்வாகத்தினர் கோவிலில் சென்று பார்க்கும்போது நாகர் சிலையின் சில பகுதிகள் சேதப்பட்டுத்தப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி :

குலசேகரம் அருகே மங்கலம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் நாகர் சிலை உள்ளது. இதை சுற்றிலும் இரும்பு கம்பியால் அளிபோட்டு பூட்டு போட்டு இருக்கும். தினமும் பூஜைக்கு மட்டும்தான் கதவு திறக்கப்பட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஒரு வாலிபர் கேட்டின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்று நாகர் சிலையை அடித்து சேதப்படுத்தினார். தகவல் அறிந்து கோவில் நிர்வாகத்தினர் கோவிலில் சென்று பார்க்கும்போது நாகர் சிலையின் சில பகுதிகள் சேதப்பட்டுத்தப்பட்டிருந்தது.

அந்த வாலிபரை பிடிக்க சென்றபோது கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு கோவில் நிர்வாகத்தினரை அவதூறாக பேசி தாக்க முயன்றார். உடனே குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்ததும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் அவனை பிடித்து குலசே கரம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மங்கலம் புதுக்குளம், திரிசில் வீடு பகுதியை சேர்ந்த அனிஷ் (வயது 30) என்று தெரியவந்தது.

அவரிடம் விசாரணை செய்தபோது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. உடனே அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டவரை மீட்டு நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுமதித்தனர்.

கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News