உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு ஆழ்கடலில் மாயமான மீனவரை தேடும் பணி 5-வது நாளாக தீவிரம்

Published On 2023-08-19 08:02 GMT   |   Update On 2023-08-19 08:02 GMT
  • கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்
  • மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் டிட்டோ. இவருக்கு சொந்தமான விசைப் படகு மூலம் கடந்த 5-ந் தேதி, 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது படகு திசை மாறி செல்வதை அவர்கள் உணர்ந்தனர். உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது, ராக்கப்பனை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், நங்கூ ரமிட்டு படகை நிறுத்தினர். பின்னர் ராக்கப்பனை படகு மற்றும் கடலுக்குள் தேடினர். இதுகுறித்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று தேங்காய் பட்ட ணம் துறைமுகத்துக்கு வந்த விசைப்படகு மீனவர்கள், ஆழ்கடலில் மாயமான மீனவர் ராக்கப்பனை கண்டு பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து மீனவர் ராக்கப்பனை தேடும் பணி 5-வது நாளாக இன்று நடைபெற்றது.

Tags:    

Similar News