உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஓடும் பழைய பஸ்களை உடனடியாக மாற்ற வேண்டும்

Published On 2023-07-08 10:08 GMT   |   Update On 2023-07-08 10:08 GMT
  • போக்குவரத்து அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
  • ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை செல்லவும் அதிக பேருந்து சேவைகள் செய்துதர வேண்டும்.

நாகர்கோவில் :

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மக்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கவும் அரசு பேருந்துகளை வெகுவாக நம்பி உள்ளனர். மக்கள் தொகை பெருகி வருவதால் இப்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை போது மானதாக இல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாத நிலை உள்ளது. ஆகையால் அனைத்து ஊரிலிருந்தும் நாகர்கோவில் செல்லவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லவும் அதிக பேருந்து சேவைகள் செய்துதர வேண்டும்.

ஏராளமான வழித்த டங்களில் இயங்கி வந்த பேருந்துகள் தக்க காரணமின்றி ரத்து செய்யப்பட் டுள்ளது. இந்த வழித்தடங்க ளில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, மருத்துவ கல்லூரி, ஸ்ரீசித்ரா மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சை தேடி செல்கின்றனர்.

திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பஸ்கள் மாற வேண்டிய கட்டாயம் தற்பொழுது உள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு நேரடி பஸ் வசதி செய்துதர வேண்டும்.

அதுபோன்று கன்னி யாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கும், வேளாங்கண்ணி, பழனி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் போதிய பேருந்து வசதிகள் இல்லை. அதற்கு ஆவண செய்ய வேண்டும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத் தில் இயங்கும் பேருந்துகள் பழுதடைந்த நிலையில் சாலைகளில் பயணிக்கிறது. அதற்கு பதிலாக நல்ல நிலையில் இயங்கும் பேருந்து கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News