உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அரவிந்த் தலைமையில் உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றபோது எடுத்த படம் 

மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2022-11-12 08:21 GMT   |   Update On 2022-11-12 08:21 GMT
  • அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
  • உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட த்தில் பல்வேறு துறைகள் மூலம் நடை பெற்று வரும் பணிகள் குறித்து, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகிய வற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வளர்ச்சி பணிகள் செயலாக்கத்தின் போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. தடைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குநர் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டா ட்சியர்சேதுராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News