உள்ளூர் செய்திகள்
டேக்வாண்டோ போட்டியில் தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளி மாணவர்கள் சாதனை
- டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
- தலைமை ஆசிரியர் உமாநாதன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.
நாகர்கோவில், நவ.22-
கன்னியாகுமரி டேக்வாண்டோ அகடாமி சார்பில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியை சேர்ந்த ருஷ்வந்த் குமார், கிருத்திகா, அஸ்லி பிளசிங், சுகேஷ், அஸ்வின் குமார் போன்றவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர். இவர்களை அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் நிஷா, வனிஷா, விஜி, அஜிதா, தலைமை ஆசிரியர் உமாநாதன், துணை தலைமை ஆசிரியர் மதிமகாதேவன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.