உள்ளூர் செய்திகள்

புனித கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான நூலக அறிவியல் கருத்தரங்கு

Published On 2023-08-29 07:04 GMT   |   Update On 2023-08-29 07:04 GMT
  • சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றியும், தரவுகள் பற்றியும் பேசினார்
  • கலந்துகொண்ட நூலகர்கள், பேராசி ரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் சுங்கான் கடை புனித கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான நூலக அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்க விழாவில் தாளாளர் மரியவில்லியம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். கல்லூரி நூலகர் விஜயகுமார் வரவேற்றார். குமரி மாவட்ட நூலக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மேரி கருத்தரங்கத்தின் மைய உரையை கூறினார். கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வாழ்த்தி பேசினார். கல்லூரி வாசகர் வட்டத்தின் முத்திரையை கல்லூரி தாளாளர் வெளியிட்டார். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கேரள பல்கலைக்கழக நூலகர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஆக்னஸ் அலெக்ஸ் ரதி பல்வேறு மாவட்டகளில் இருந்து வந்திருந்த நூலகர்களையும், ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நன்றி கூறினார்.

இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினர் சுரேஷ்குமார் சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றியும், தரவுகள் பற்றியும் பேசினார். 3-ம் அமர்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நூலகர்கள் கட்டுரை வாசிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டது. 4-ம் அமர்வில் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு குமரி மாவட்ட நூலகர் அதிகாரி மந்திரம் தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார்.

கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நூலகர்கள், பேராசி ரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரி நூலகர் ஜெயகலா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், குமரி மாவட்ட நூலக கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் நூலகம், கல்லூரி வாசகர் வட்டம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News