உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் சிறுதானியங்கள் விழிப்புணர்வு நடைபயணம்

Published On 2023-09-17 06:56 GMT   |   Update On 2023-09-17 06:56 GMT
  • ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தொடங்கி வைத்தார்
  • விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு

கன்னியாகுமரி :

உலக சுகாதார நிறுவனம் 2023-ம் ஆண்டை சிறுதானி யங்கள் ஆண்டாக அறி வித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய சுகாதார நிறுவனமும் சிறுதானிய கழகமும் இணைந்து சிறுதானிய உணவினை

உ ட்கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு பகுதிக ளில் சிறுதானியங்கள் பற்றிய கண்காட்சி, உணவு திருவிழா மற்றும் நடை பயணம் போன்ற நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கன்னியாகுமரியில் இன்று காலை கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சிறுதானியங்கள் விழிப்புணர்வு நடைபயணம் நடை பெற்றது.

திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இருந்து இந்த நடை பயணம் தொடங்கியது. இந்த நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கி னார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுரா மலிங்கம் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு சிறுதானிய விழிப்புணர்வு நடைபயணத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. பிரமுகர் டாக்டர் சுந்தர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News