உள்ளூர் செய்திகள்

மலர் மகளிர் அமைப்பு சார்பில் சிறு தானிய உணவு திருவிழா

Published On 2023-09-21 14:12 IST   |   Update On 2023-09-21 14:12:00 IST
  • நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் நடந்தது
  • மலர் மகளிர் அமைப்பு கவுரவத்தலைவர் செலின்மேரி தலைமை தாங்கினார்

நாகர்கோவில் :

சமூக பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு குமரி மாவட்ட மலர் மகளிர் அமைப்பு, கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி சிறு தானிய உணவு திருவிழா மற்றும் சிறுதானிய உணவு தயாரித்தல் விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் நடந்தது.

மலர் மகளிர் அமைப்பு கவுரவத்தலைவர் செலின்மேரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் லிட்வின் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் மேரி ேஜாஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் சன்லைட் நல்வாழ்வியல் மையம் பயிற்சியாளர் டாக்டர் அரசு மற்றும் அலமேலு மங்கை நாச்சியார், அனிஷா, ராஜகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News