உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் வசூல்

Published On 2022-06-25 09:51 GMT   |   Update On 2022-06-25 09:51 GMT
  • 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
  • ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜயகுமார் விஜிலென்ஸ் அதிகாரி நாயுடு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் வருமானமாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல் ஆகி இருந்தது.

Tags:    

Similar News