உள்ளூர் செய்திகள்

குமரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை

Published On 2023-09-21 12:04 IST   |   Update On 2023-09-21 12:04:00 IST
  • பாலமோரில் 35.2 மில்லி மீட்டர் பதிவு
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.05 அடியாக உள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நீர்நிலைகளி லும், பாசன குளங்களிலும் தண்ணீர் பெருகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை சற்று குறைந்திருந்தது. நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள் ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்ப குதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பாலமோரில் அதிகபட்ச மாக 35.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, சுருளோடு, மாம்பழத்துறையாறு, திற்பரப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதி கரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 783 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.94 அடியாக இருந்தது. அணைக்கு 924 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.05 அடியாக உள்ளது.

அணைக்கு 355 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 14.8, பெருஞ்சாணி 7.6, சிற்றார்1-7, சிற்றார் 2-2, பூதப்பாண்டி 2.8, களியல் 3.4, கன்னிமார் 12.4, குழித்துறை 2.6, சுருளோடு 10, பாலமோர் 35.2, மாம்பழத்துறையாறு 3, திற்பரப்பு 3.2.

Tags:    

Similar News