உள்ளூர் செய்திகள்

கோட்டார் பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி - விபத்துகளில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2023-02-23 12:47 IST   |   Update On 2023-02-23 12:47:00 IST
  • நாய்கள் குறுக்கே பாய்வதால் இரு சக்கர வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்
  • வடசேரி பஸ் நிலையத்திலும் நாய்கள் தொல்லையால் பஸ் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கோட்டார் போலீஸ் நிலையம் முன் பகுதியில் தினமும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாய்கள் குறுக்கே பாய்வதால் இரு சக்கர வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நடந்து செல்லும் பொது மக்களை யும் நாய்கள் துரத்தி வரு கிறது.

எனவே அந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத் துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் உள்பகுதி யிலும் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. கலெக் டர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் பொது மக்கள் நாய்கள் தொல்லை யால் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். வடசேரி பஸ் நிலையத்திலும் நாய்கள் தொல்லையால் பஸ் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிருஷ்ணன் கோவில், பார்வதிபுரம், ஒழுகினசேரி, வடசேரி உள்பட மாநகர பகுதியில் பல்வேறு இடங்களிலும் நாய்களின் தொல்லை அதிக ரித்து வருவ தால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங் களில் சுற்றித்திரியும் நாய் களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Tags:    

Similar News