உள்ளூர் செய்திகள்

நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

Published On 2023-08-07 08:32 GMT   |   Update On 2023-08-07 08:32 GMT
  • தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு வழங்கினார்
  • முதல் 2 இடங்களை பிடித்த 10 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கன்னியாகுமரி :

தக்கலை நகர தொழில் வணிகர் சங்க 27-வது ஆண்டு விழா வருடாந்திர பொதுக்குழு, பரிசளிப்பு மற்றும் விருது வழங்குதல் உள்ளிட்டவை முப்பெரும் விழாக்களாக கொண்டாடப்பட்டது. சங்க கொடியை தலைவர் ஜெகபர் சாதிக் ஏற்றினார். விழாவில் கடந்த 2 கல்வி ஆண்டுகளில் அரசு பொதுத்தேர்வில் 10,12-ம் வகுப்புகளில் முதல் 2 இடங்களை பிடித்த 10 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், நகர்மன்ற ஆணையாளர் லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சந்திரமோகன், மன்மதன், வெனிபால்டு ரூபஸ், சனூஜ் கபூர், விஜயகுமார், விஷாக், முருகேசன், வேலாயுதன் பிள்ளை, தக்கலை சிவா, பத்மதாஸ், பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் தாணு மூர்த்தி, துணை தலைவர்கள் சுரேஷ்குமார், சண்முகம், செயலாளர்கள் மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவத் தலைவர் ஆனந்தம் குமார், ஜெயக்குமார், தொழிலாளர் நலத்துறை அலுவலர் மன்னன் பெருமாள், நகர் மன்ற துணைத் தலைவர் உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News