உள்ளூர் செய்திகள்
கொட்டாரத்தில் தீபாவளி விழாவையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரைபாரதி வழங்கினார்
- கொட்டாரம் ராமச்சந்திரா நகர் நேதாஜி இளந்தளிர் நற்பணி மன்றம் சார்பில்
- 18-வது ஆண்டு தீபாவளி விழா 2 நாட்கள் நடைபெற்றது
நாகர்கோவில் : கொட்டாரம் ராமச்சந்திரா நகர் நேதாஜி இளந்தளிர் நற்பணி மன்றம் சார்பில் 18-வது ஆண்டு தீபாவளி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் மாபெரும் கபடி போட்டி, உறி அடித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் 2-வது நாள் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.