முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை
- குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
- குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.
கன்னியாகுமரி:
குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் பராமரிப்பு பணிக்காக முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.
இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைக ளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.